6 மாதம் உபயோகத்தில் இல்லாத ட்விட்டர் கணக்குகள் நீக்கம்

6 மாதங்கள் வரை பயன்படுத்தாத ட்விட்டர் கணக்குகளை நீக்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பயனாளர்களுக்கு நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களை வழங்கும் நோக்கத்தில் திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 6 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தப்படாத ட்விட்டர் கணக்குகளை டிசம்பர் 11 ஆம் தேதி முதல் நிரந்தரமாக அழிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. ட்விட்டரின் இந்த நடவடிக்கை அதில் கணக்கு வைத்துள்ள அனைவருக்கும் முதலில் தகவல் அனுப்பப்பட்டு அதன் பின் தான் நீக்கம் செய்யப்படும் என தெரிவுப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைமூலம் வாடிக்கையாளர்களை தொடர்ந்து ட்விட்டர் தளத்தை பயன்படுத்த வைக்க முடியும்.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பயனாளர்களுக்கு மேலும் பல வசதிகளை ஏற்படுத்தி தர இருப்பதால் அதில் ஒரு நடவடிக்கை தான் இந்த கணக்குகள் நீக்கம்” என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இந்த உபயோகமில்லாத கணக்குகளை நீக்கும் நடவடிக்கைகளை யாஹூ நிறுவனமும், கூகுள் நிறுவனமும் பல ஆண்டுகளாகவே நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version