நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வெள்ளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்
பரமத்தி வேலூரை அடுத்த பொத்தனூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான சரவணன், மனைவி 2 குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் காவிரியாற்றிற்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்று மணலில் சிக்கி 6 பேரும் பலியாகினர். அவர்களில் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மாயமான 2 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.