பூனாவில் இருந்து 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் இன்று தமிழகம் கொண்டுவரப்படுகிறது.

பூனாவில் இருந்து 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் இன்று தமிழகம் கொண்டுவரப்படுகிறது.

தமிழகத்தில் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளின் காரணமாக 45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்கேற்ப அரசும், மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகளை வரவழைத்து பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைத்து வருகிறது.

இருதினங்களுக்கு முன் 1லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வந்தது.

இந்நிலையில் கூடுதலாக 15 லட்சம் டோஸ் கோவிஷீல்டும், 5 லட்சம் டோஸ் கோவாக் ஷின் தடுப்பூசிகளுக்கும் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில்,

இன்று 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பூனாவில் இருந்து தமிழ்நாடு கொண்டு வரப்படுகின்றன.

சென்னை விமான நிலையத்தில் இருந்து டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் தேவையுள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Exit mobile version