இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் பணியாளர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்களில் 6வது ஊதியக்குழுவின்படி சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு, அரசாணையின்படி கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அதன்படி, ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் உதவித்தொகை நிர்ணய வருமானமுள்ள கோவில் பணியாளர்களுக்கு, அகவிலைப்படியை 6சதவீதம் உயர்த்தி 154 விழுக்காடாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு பகுதிநேர பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள், தொகுப்பு ஊதியம்பெறுவோர் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர், பட்டியலில் இடம் பெறாதவர்கள் ஆகியோருக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post