கோவை, நீலகிரி உள்பட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

தமிழகத்தில், 6 மாவட்டங்களில் இன்று மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவ காற்றும் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் காற்றானது மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version