6 கேமரா…2 டிஸ்பிளே..அசத்தும் சாம்சங்

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த மடித்து விரிக்கக்கூடிய ஸ்மார்ட் போனை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய மார்க்கெட் நிலவரத்தில் ஒவ்வொரு மொபைல் நிறுவனமும் புது புது வசதிகளை கொண்ட போன்களை அறிமுகப்படுத்துகிறது. இத்தகைய வசதிகளைத் தான் வாடிக்கையாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.முன்னணி மொபைல் நிறுவனங்களான ஆப்பிள், ஒன் பிளஸ், விவோ,ஓப்போ நிறுவனங்களை முந்திக்கொண்டு சாம்சங் நிறுவனம் அமெரிக்காவில் மடித்து விரிக்கக்கூடிய மொபைலை நேற்றைய தினம் அறிமுகப்படுத்தியது.

சாம்சங் கேலக்சி ஃபோல்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைலானது 4ஜி, 5ஜி என்ற இருவேறு தொழில்நுட்பத்தில் வெளியிடப்படுகிறது. இதில் 4ஜியில் இயங்கும் சாம்சங் கேலக்சி ஃபோல்ட் வரும் ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகே இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இதன்விலை இந்திய மதிப்பில் ரூ.1.4 லட்சம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதன் சிறப்பம்சங்கள்:

> 4ஜி மற்றும் 5ஜி என்ற இருவேறு தொழில்நுட்பம்

> டிஸ்பிளே மடித்த நிலையில் 4.6 இன்ச்(சாதாரண மொபைல் போல), விரித்தால் 7.3 இன்ச் கொண்ட
டேப்ளேட்டாக மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு டிஸ்பிளேக்களையும் ஒரே
சமயத்தில் பயன்படுத்தலாம் என்பது சிறப்பு.

> இந்த மொபைல் பிராசசர் 7NM தொழில்நுட்பம் கொண்டுள்ளது.

> மொபைலின் சேமிப்பு திறன் 12 GB RAM , 512 GB ROM கொண்டுள்ளது. மேலும் அதிவேக டேட்டா பரிமாற்றத்திற்கு உதவும் யுனிவர்சல் பிளாஷ் ஸ்டோரேஜ் 3.0 வை கொண்டுள்ளது.

> போட்டோகிராபர்களுக்கு சவால் விடும் வகையில் , மொத்தம் ஆறு கேமராக்கள் உள்ளன.16 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு கேமரா, 12 மெகா பிக்சல் வைடு-ஆங்கில் கேமரா, 12 மெகா பிக்சல் டெலிபோட்டோ கேமரா ஒரு டிஸ்பிளேவிலும், இரண்டு கேமராக்கள் மற்றும் 10 மெகா பிக்சல் கொண்ட செல்பி கேமரா மற்றொரு டிஸ்பிளேவிலும் கொண்டுள்ளது.

> ஒரே நேரத்தில் மூன்று ஆப்களை பயன்படுத்த முடியும். அதாவது ஒரு டிஸ்பிளே வீடியோ பார்க்கிறீர்கள் என்றால் மற்றொரு டிஸ்பிளேவில் வாட்ஸ்அப், பேஸ்புக் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதில் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மொபைல் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version