தமிழகத்தில் இதுவரை 6.69 லட்சம் பேர் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
மத்திய அரசு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்து வருகிறது. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றவுடன் மானியத்தை பொதுமக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மேலும் சமையல் எரிவாயு மானியம் தேவைப்படாத வசதி படைத்தவர்கள் தாங்களே மானியத்தை விட்டுக் கொடுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் இதுவரை சுமார் 6.69 லட்சம் பேர் சமையல் எரிவாயு உருளைக்கான மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் மானியத்தை விட்டுக் கொடுத்தவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களின் பெயர்களை தங்கள் இணையதளத்தில் வெளியிடுவதாகவும் அவை குறிப்பிட்டுள்ளன.