மலேசிய மன்னர் பட்டத்தை துறந்தார் 5ஆம் சுல்தான் முகமது

மலேசிய மன்னரான 5ஆம் சுல்தான் முகமது தனது பட்டத்தைத் துறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு மலேசிய மன்னராக சுல்தான் முகமது பதவியேற்றார். மன்னர் பட்டத்தை ஏற்றதிலிருந்தே மருத்துவச் சிகிச்சை பெறுவதாகக் கூறி அரசப் பணிகளில் ஒதுங்கியிருந்தார். ரஷிய பெண் ஒருவரை சுல்தான் முகமது திருமணம் செய்துகொண்டதாகவும், விரைவில் தனது மன்னர் பட்டத்தை அவர் துறப்பார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில், மன்னர் ஐந்தாம் சுல்தான் முகமது தனது பட்டத்தைத் துறந்ததாக மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவர் மன்னர் பட்டத்தைத் துறந்ததற்கான காரணம் எதுவும் அரசவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. மலேசியா  1957-ஆம் ஆண்டு இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, மன்னர் ஒருவர் பட்டம் துறப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version