தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 860 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 105ஆக அதிகரித்துள்ளது.
நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரத்து 860 பேரில் 3 ஆயிரத்து 509 பேர் ஆண்களும், 2 ஆயிரத்து 351 பேர் பெண்களும் ஆவர்.
தலைநகர் சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 444 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் 422 பேருக்கும், செங்கல்பட்டில் 376 பேருக்கும், கோவையில் 290 பேருக்கும் நோய் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. தேனி 213 பேருக்கும், ராணிப்பேட்டை 260 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 72 ஆயிரத்து 251ஆக அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தோரின் சதவீதம் 81 புள்ளி 97 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 127 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 54 ஆயிரத்து 213 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.