கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக 2 நாட்களில் 58 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் தீவிரமாக அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனைத்து படுக்கைளும் நிரம்பியுள்ளன.
நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவை நாளொன்றுக்கு மூவாயிரம் லிட்டரை தாண்டியுள்ளது.
மருத்துவமனையில் பத்தாயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் சேமித்து வைக்கும் திறன் உள்ளது. ஆனால் டேங்கரில் அளவு குறையும்போது, ஆக்சிஜன் செல்லும் அழுத்தமும் குறைகிறது.
இதனால் நோயாளிகளுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு மாறுபட்டு, மூச்சுத்திணறல் அதிகரிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதன்காரணமாக கடந்த 2 நாட்களில் மட்டும் 58 பேர் உயிரிழந்திருப்பதாக நோயாளிகளும், பொதுமக்களும் அச்சம் தெரிவித்துள்ளனர்.