அரியலூரில் 5,708 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா

அரியலூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கினார். அரியலூர் மாவட்டத்தில் 2018 -19 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வினய் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், 5 ஆயிரத்து 708 மாணவ, மாணவியருக்கு 7 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். மாற்று திறனாளிகளுக்கு 16 லட்சம் மதிப்பிலான சிறப்பு பேட்டரி பொருத்தப்பட்ட சைக்கிள்களை வழங்கினார். மாற்றுதிறனுடையோரை திருமணம் முடித்த பயனாளிகளுக்கு தலா 25ஆயிரம் ரூபாய் நிதியுதவியுடன், தலா 8 கிராம் தங்கத்தையும் அவர் வழங்கினார்.

Exit mobile version