சேலத்தில் 25 வயது காதலியை கொன்று விட்டு 57 வயது நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் இனாமுல்லா. 57 வயதான இவருக்கும் சித்தாரா பானு என்ற திருமணமான பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தத்தமது குடும்பத்தினரை பிரிந்து, தனியாக வாழ்ந்து வந்த நிலையில் இனாமுல்லா சமீப காலமாக தான் தவறு செய்து விட்டதாக புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில் சித்தாரா பானு வேலை செய்த ஐஸ் கிரீம் கடைக்கு சென்ற இனாமுல்லா, கதவை பூட்டி விட்டு சித்தாரா பானுவை கழுத்தறுத்து கொன்றதாக கூறப்படுகிறது. பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இனாமுல்லா எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.