தமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

தமிழகத்தில் மேலும் ஐந்தாயிரத்து 684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 79 ஆயிரத்து 144 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் ஐந்தாயிரத்து 684 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூவாயிரத்து 380 ஆண்களுக்கும், இரண்டாயிரத்து 304 பெண்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 91 ஆக உள்ளது. மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 96 ஆக உயர்ந்துள்ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நோய் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை மாவட்ட அளவிலும் அதிகரித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டில் 408 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 336 பேருக்கும், திருவள்ளூரில் 320 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் 270 பேரும் , திருநெல்வேலியில் 250 பேரும், தூத்துக்குடியில் 237 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 6 ஆயிரத்து 272 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக 2 லட்சத்து 21 ஆயிரத்து 87 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் சதவிகிதம் 79 புள்ளி 20 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் 57 ஆயிரத்து 968 பேர் உள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மூவாயிரத்து 935 ஆக இருக்கிறது.

Exit mobile version