வேலூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.56 லட்சம் பறிமுதல்

வேலூர் அருகே, தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில், 56 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அங்கு தேர்தல் விதிகள் அமலில் உள்ளன. இந்தநிலையில், ஆம்பூரில், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினிவேனை மடக்கி விசாரணை மேற்கொண்ட போது, வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 54 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கிருபாகரன் என்பவரிடமிருந்து 2 லட்சத்து 14ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்ட பணம், வட்டாட்சியரும் கூடுதல் உதவி தேர்தல் அலுவலருமான சுஜாதாவிடம் ஒப்படைத்து, பின்னர் வாணியம்பாடி கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

Exit mobile version