இந்திய நாட்டில் முதல் முறையாக, உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து தனியார் ரயிலை தொடங்க மத்திய அரசு திட்டம் திட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். இந்த ரயிலில் அப்படியென்ன சிறப்புகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மத்திய அரசு துறையின் கீழ் தான் இந்திய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்து முடிந்த மத்திய பட்ஜெட்டில் இந்திய ரயில்களை தனியாரிடம் ஒப்படைப்பதாக அறிவித்தார்கள். அதன் மூலம், பல்வேறு துறைகளில் தனியாருக்கு வாய்ப்பளிக்க மத்திய அரசு முடிவு செய்து தீவிரம் காட்டியும் வருகிறது. இந்நிலையில் முதல் முறையாக தனியார் நிறுவனத்தின் கீழ் புதிதாக ரயில் ஒன்று இயக்க முடிவு செய்துள்ளது.
இந்த ரயிலுக்கு ‘தேஜாஸ் எக்ஸ்பிரஸ்’என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் இருந்து டெல்லி வரை இயக்க முடிவு செய்துள்ளனர். இந்த ரயிலை வரும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் லக்னோ ரயில் நிலையத்தில் இருந்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைக்க போகிறார். இதன் பயண தூரம் மட்டும் 554 கி.மீ தூரத்தை புதிய ரயிலான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் மொத்தம் 6 மணி நேரம் 15 நிமிடங்களில் இந்த தூரத்தை கடக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த தேஜாஸ் எக்ஸ்பிரஸ் டெல்லியில் இருந்து காலை 6.10க்கு புறப்பட்டும், மதியம் 12.25 மணிக்கு டெல்லிக்கு செல்லும்.
பின்பு, மறுமார்க்கமாக இந்த ரயில் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 10. 45 மணிக்கு லக்னோ சென்றடையும். இந்த ரயில் கான்பூர் சென்ட்ரல் மற்றும் காசியாபாத் ஆகிய இரு ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் என்பது கூடுதல் தகவல். இந்த ரயிலில் ஓரு ஏசி பெட்டியில் 56 இருக்கைகளும் இடம்பெற்றுள்ளன. இதுதவிர 78 இருக்கைகள் கொண்ட 9 ஏசி பெட்டிகள் உள்ளன. மொத்தம் 758 இருக்கைகள் கொண்ட தேஜாஸ் ரயிலிகள் இயக்க ரெடியாக இருக்கின்றன.