ரேபிஸ் நோயால் உலகில் ஆண்டுக்கு 55,000 பேர் உயிரிழப்பு

ரேபிஸ் நோயைத் தடுப்பதற்காக உதகையில் உள்ள நிறுவனத்தில் ஆண்டுக்கு 1 கோடியே 70 லட்சம் ரேபீஸ் தடுப்பு ஊசிகள் தயாரிக்கப்பட்டு, 40 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நாய், வௌவால் போன்ற விலங்குகள் கடிப்பதால் ஏற்படும் ரேபிஸ் நோயானது, மனிதனின் உடலில் பரவி மூளையைச் செயலிழக்கச் செய்கிறது. இந்த ரேபிஸ் வைரஸ் மனிதனின் உயிரைப் பறிக்கும் மிகக்கொடிய வைரஸ் ஆகும்.
இந்நோயால் உலகளவில் ஆண்டுக்கு 55 ஆயிரம் பேரும் மற்றும் இந்திய அளவில் 20 ஆயிரம் பேரும் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ரேபிஸ்க்கான தடுப்பு மருந்து தயாரிப்பில் உதகையில் தேசியப் பால் வளக் கழகத்தின் உதவி நிறுவனமான Human Biological நிறுவனம் உலகில் இரண்டாவதாகவும், இந்தியாவில் முதல் நிறுவனமாகவும் விளங்குகிறது. அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க 1999ஆம் ஆண்டு தொடங்கிய இந்நிறுவனம் வீரோ செல் கல்ச்சர் மூலம் பாதுகாப்பான ரேபீஸ் தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கின்றது. இந்தியாவில் ஒருகோடி நாய்கள் உள்ளன. இவற்றில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் தவிரத் தெரு நாய்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. எனவே ரேபிஸ் நோயைக் கட்டுப்படுவதற்காக நாய்களுக்குத் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் இறங்கியது இந்நிறுவனம்.மிகுந்த கவனத்துடன் இந்தத் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருகிறது, ஆண்டுக்கு 1 கோடியே 70 லட்சம் ரேபீஸ் தடுப்பு ஊசிகள் தயாரிக்கப்பட்டு உள்நாட்டில் பயன்படுத்தப்படுவதுடன், துருக்கி, வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட 40 நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

உதகை அருகே குன்னூர் சிம்ஸ்பார்க்கிலுள்ள பாஸ்டர்ஸ் இன்ஸ்டியூட் ரேபீஸ் தடுப்பூசி மருந்து தயாரிப்பை நிறுத்திய நிலையில், உதகை Human Biological Institute அமைதியான முறையில் ரேபீஸ் தடுப்பூசி மருந்து தயாரிப்பில் சாதனை புரிந்து வருவது குறிப்பிடத் தக்கது.

Exit mobile version