புதுச்சேரி மறு வாக்குப்பதிவில் 55.35% வாக்குகள் பதிவு

புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட 10 ஆம் எண் வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறு வாக்குப்பதிவில் 55.32 சதவிகித வாக்குகள் பதிவாகின.

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட 10 ஆம் எண் வாக்குச்சாவடியில் மாதிரி வாக்குப்பதிவை, விவிபேட் இயந்திரத்தில் இருந்து அகற்றாமல் வாக்குப்பதிவு நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 55.35 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த வாக்குப்பதிவைவிட 8 சதவிகித வாக்குப்பதிவு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version