மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் 55.31% வாக்குகள் பதிவு

மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்தது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 6 மணி நிலவரப்படி 55.31 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. 24 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

இதேபோல், அரியானாவில் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் மொத்தமாக நடைபெற்ற வாக்குப்பதிவில் மாலை 6 மணி நிலவரப்படி 61.62 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அதிகாரி மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

Exit mobile version