ஒரே நாளில் விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 532பேர் மீது வழக்கு பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில், ஒரே நாளில் விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 532 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர தினம் நாளை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சோதனைச் சாவடிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்திலும், கண்காணிப்பை பலப்படுத்திய காவல்துறையினர் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் படி நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், அதி வேகமாக வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டுதல் என, ஒரே நாளில் விதிமுறைகளை மீறி வாகனம் ஒட்டிய 532 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version