உலகளவில் 53 லட்சம் பேர் பாதிப்பு!

உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53 லட்சத்தை கடந்துள்ளது. 21 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 லட்சத்து 45 ஆயிரமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 290 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 97 ஆயிராக அதிகரித்துள்ளது. 3-வது இடத்தில் இருந்த பிரேசில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதன்படி, பிரேஸிலில் 3 லட்சத்து 32 ஆயிரம் பேரும், ரஷ்யாவில் மூன்று லட்சத்து 26 ஆயிரம் பேரும், ஸ்பெயினில் இரண்டு லட்சத்து 81 ஆயிரம் பேரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இங்கிலாந்தில் 2 லட்சத்து 54 ஆயிரம் பேரும், இத்தாலியில் 2 லட்சத்து 28 ஆயிரம் பேரும், பிரான்சில் ஒரு லட்சத்து 82 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, ஜெர்மனி, துருக்கி, ஈரான் போன்ற நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது.

Exit mobile version