சபரிமலையில் 51 பெண்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக கேரள அரசு அறிக்கை தாக்கல்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 51 பெண்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், பிந்து, கனகதுர்கா ஆகியோர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே சபரிமலைக்கு சென்று வந்த கனகதுர்காவை, அவரது மாமியார் தாக்கியதாகவும், தனக்கு பாதுகாப்பு கேட்டும் உச்சநீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, கனகதுர்காவுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம், கேரள அரசுக்கு உத்தரவிட்டது. இதுவரை சபரிமலையில் 51 பெண்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version