பேரறிஞர் அண்ணாவின் 50வது ஆண்டு நினைவு தினம்: முதலமைச்சர், துணைமுதலமைச்சர், அமைச்சர்கள் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 50வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் மரியாதை செலுத்தினர்

பேரறிஞர் அண்ணாவின் 50வது ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் மலர் வளையம் வைத்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Exit mobile version