5 ஆயிரம் கிலோ கிச்சடி செய்து, உலக சாதனை முயற்சி

டெல்லியில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்ற, பொதுக்கூட்டத்தில் 5 ஆயிரம் கிலோ கிச்சடி செய்து, உலக சாதனைக்கு முயற்சிக்கப்பட்டது.

டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில், அமித் ஷா பங்கேற்ற, பொது கூட்டம் நடந்தது. இதில், அரிசி மற்றும் பயறு வகைகளை பயன்படுத்தி, 5 ஆயிரம் கிலோ கிச்சடி தயாரிக்கப்பட்டது. இந்த கிச்சடி, பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த, 2017 ஆம் ஆண்டு மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்த, இந்திய உணவு திருவிழாவின் போது, 918 கிலோ கிச்சடி செய்தது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. தற்போது, 5 ஆயிரம் கிலோ கிச்சடி தயாரிக்கப்பட்டுள்ளது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version