500 வருடங்கள் பழமையான நாவல் மரத்தை கண்டு ரசிக்க அனுமதி வழங்க வேண்டும்

கொடைக்கானலில் 500 வருடங்கள் பழமையான நாவல் மரத்தை கண்டு ரசிக்க அனுமதி வழங்க வேண்டும் என வனத்துறைக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானலில் உள்ள பசுமையான சுற்றுலா தலங்களை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக பாம்பார்புரம் செல்லும் வழியில் உள்ள 500 வருடங்கள் பழமையான நாவல் மரத்தை காண சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் உள்ளனர்.

வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நாவல் மரத்தின் தரைப்பகுதியில் 10க்கும் மேற்பட்டவர்கள் நிற்கக் கூடிய அளவிற்கு அமைந்துள்ளது. இதன் அடித் தோற்றம் சிங்க முகத்தைப் போன்று உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், காட்டு விலங்குகளின் நடமாட்டத்தாலும், சமூக விரோதிகளின் அச்சத்தாலும் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் ஏமாற்றமடைந்துள்ள சுற்றுலா பயணிகள், அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version