பாகிஸ்தான் தீவிரவாதிகள் 500 பேர், இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி செய்து வருவதாக இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இளம் அதிகாரிகளுக்கான பயிற்சி பிரிவை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தானால் இந்தியாவிற்குள் தீவிரவாதம் பரப்பப்படுவதாக தெரிவித்தார். ஜம்மு காஷ்மீருக்குள் பாகிஸ்தானால் அதிகளவில் தீவிரவாதம் பரப்பப்படுகிறது என குற்றம்சாட்டிய அவர், காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் தீவிரவாதத்திற்கு உதவுபவர்களுக்கும் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுவதாக குறிப்பிட்ட அவர் வன்முறைகள் கட்டுப்படுத்தப்பட்டு தீவிரவாதிகள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.