தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 500 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து 133 கோடி மதிப்பீட்டில் 500 புதிய பேருந்துகளின் சேவைகளை தொடங்கிவைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் பேருந்தில் ஏறி ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழுப்புரம், சேலம், கும்பகோணம் மற்றும் சென்னை கோட்டங்களில் இயக்கப்படவுள்ள இந்த புதிய பேருந்துகளில், நகரும் வசதியுள்ள இருக்கைகள் மற்றும் அனைத்து இருக்கைகளிலும் செல்போன் சார்ஜிங் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏசி வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தப் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து வேலூர், திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன.