500 புதிய பேருந்துகளின் சேவையை துவக்கி வைத்தார் முதலமைச்சர்

ரூபாய் 150 கோடி  மதிப்பில் 500 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய 500 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். அதன்படி, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 100 பேருந்துகள், விழுப்புரத்திற்கு 10 பேருந்துகள், சேலத்திற்கு 20 பேருந்துகள், 150 விரைவுப் பேருந்துகள், கோவைக்கு 30 பேருந்துகள், கும்பகோணத்திற்கு 110 பேருந்துகள், மதுரைக்கு 50 பேருந்துகள், நெல்லைக்கு 30 பேருந்துகள் உள்பட 500 பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர், புதிய பேருந்துகளில் செய்யப்பட்டுள்ள வசதிகளை முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பேருந்துக்குள் சென்று பார்வையிட்டனர்.

Exit mobile version