சுற்றுசூழல் மாசு ஏற்படுத்தும் கார்களை விற்பனை செய்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு 500 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சமீபகாலமாக டெல்லியில் நிலவி வரும் காற்று மாசு காரணமாக மூச்சுத்திணறல் உள்ளிட்ட சிரமங்களுக்கு பொதுமக்கள் ஆளாகினர். இதனிடையே டெல்லியில் அதிகளவில் பயன்பாட்டில் இருக்கும் ஃபோக்ஸ்வேகன் கார்களில் இருந்து வெளியேறும் புகை தான் காற்று மாசுக்கு முக்கிய காரணம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்தநிலையில் வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சுற்றுச்சூழல் மாசுக்கு காரணமான ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனத்திற்கு 500 கோடி ரூபாய் அபராதம் விதித்ததுடன், 2 மாதத்தில் அபராத தொகையை செலுத்த வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளது.