நிலவுக்கு நீல் ஆம்ஸ்ட்ராங் சென்று 50 ஆண்டுகள் நிறைவு

அமெரிக்காவில் உள்ள கென்னடி ஆராய்ச்சி மையத்திலிருந்து, 1969ஆம் ஆண்டு நிலவை ஆய்வு செய்வதற்காக, அப்போலோ லெவன் என்ற விண்கலம் ஜூலை 16ல் விண்ணில் செலுத்தப்பட்டது. மனிதர்களுடன் சென்ற அப்பலோ விண்கலம் 1969 ஆம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி நிலவை சென்றடைந்தது. இதில் பயணித்த விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால்பதித்த முதல் மனிதர் என்ற பெருமையை பெற்றார்.

இத்திட்டம் இன்றைய பண மதிப்பில் சுமார் 200 பில்லியன் டாலர்கள் செலவில் முன்னெடுக்கப்பட்டதாகும். இந்த குழுவினர் பூமியிலிருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் மைல்கள் பயணம் செய்து 76 மணி நேரத்தில் சந்திரனுக்கு சென்றடைந்தனர். நிலவில் இறங்கிய நீல் ஆம்ஸ்டிராங்கும், அவருடன் நிலவில் இறங்கி நடந்த பஸ் ஆல்டிரினும் அணிந்திருந்தவை மெக்கானிக்கல் கைக்கடிகாரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பயணத்தை வெற்றிகரமாக முடித்த அப்பல்லோ விண்கலம் பூமிக்குத் திரும்பியதும், அதில் பயணித்த விண்வெளி வீரர்கள் ஆபத்தான நோய்க்கிருமிகளால் பாதிக்கபட்டிருந்தால், அவர்கள் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர். முன்னதாக நாசாவின் Lunar Reconnaissance Orbiter கேமரா நிலவில் எஞ்சியிருக்கும் ஆறு அமெரிக்க கொடிகளின் புகைப்படங்களை எடுத்தது. ஐந்து கொடிகள் நின்ற நிலையிலும் ஒரு கொடியானது அப்பல்லோ விண்கலம் நிலவிலிருந்து புறப்பட்ட உந்துதலால் வீழ்த்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Exit mobile version