சிவகங்கை அருகே 50 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல்

சிவகங்கை அருகே தடை செய்யப்பட்ட 50 ஆயிரம் மதிப்பிலான நெகிழி பைகளை சுகாதார அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது குறித்து சுகாதாரப் பணியாளர்களால் திடீர் ஆய்வு நடத்தபட்டது. பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் 70-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வட்டார மருத்துவ அதிகாரி தலைமையில் சிங்கம்புணரி நகர் வர்த்தக மையங்களில் திடீர் சோதனை நடத்தினர். இதில் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் அபராதம் விதிக்கப்பட்டு, பின்னர் எச்சரிக்கை செய்யப்பட்டது.

Exit mobile version