50% இட ஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!!

மருத்துவப் படிப்புகளில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படும் மருத்துவ இடங்களில், 50 சதவீத இடங்களை, ஓபிசி பிரிவுக்கு ஒதுக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியது.

இதைத் தொடர்ந்து, அதிமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி சண்முகம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்னிலையில், இன்று விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசு வரும் திங்கள்கிழமைக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், வழக்கை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Exit mobile version