தனியார் மருத்துவமனைகள் 50 சதவிகித படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டுமென தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், நோயாளிகளின் எண்ணிக்கை உயருவதை கருத்தில்கொண்டு படுக்கை வசதிகளை அதிகரிக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள 578 தனியார் மருத்துவமனைகளும், 50 சதவிகித படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டுமென சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் 50 சதவிகித படுக்கைகள் ஒதுக்கப்பட வேண்டுமென்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும்வரை முக்கியத்துவமற்ற சிகிச்சைகளுக்கு நோயாளிகளை அனுமதிப்பதை நிறுத்த வேண்டுமென்றும், அரசின் உத்தரவுகள் முழுமையாக பின்பற்றப்படுவதை தனியார் மருத்துவமனைகள் உறுதிசெய்ய வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.