கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் இதுவரை 50 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இறப்பு எண்ணிக்கையை முடிந்தவரை குறைவாக வைத்திருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து பரவியதை சுட்டிகாட்டிய டிரம்ப், அதில் யாருடைய தவறும் இல்லை என்றும், அதை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார். கொரோனாவை முற்றிலும் ஒழிக்க நாம் அனைவரும் ஒன்று இணைந்து செயல்பட வேண்டும் என்ற கூறிய அவர், விரைவில் இந்த பிரச்சனையை தீர்ப்போம் என்று தெரிவித்தார். இந்நிலையில், அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோரின் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.