வரும் மார்ச் மாதத்திற்குள் நாட்டில் 50 சதவீதம் ஏ.டி.எம்.கள் மூடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் சுமார் 2 லட்சத்து 38 ஆயிரம் ஏ.டி.எம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இதில் சுமார் ஒரு லட்சத்து 13 ஆயிரம் ஏ.டி.எம் மையங்கள் பல்வேறு காரணங்களால் செயல்பாட்டில் இயங்காத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக 15 ஆயிரம் ஏ.டி.எம் மையங்கள் முழுவதுமாக செயல்பாட்டில் இல்லாத நிலை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக மத்திய அரசின் மானிய உதவி பெறும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் குறையும் நிலை உருவாகும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏ.டி.எம் மையங்கள் மிகவும் உதவிகரமாக இருந்த நிலையில், தற்போது 50 சதவீத ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும் என்ற தகவல் சாமானிய மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.