எவரெஸ்ட் மலையில் இருந்து 5 டன் குப்பை அகற்றம்

உலகிலேயே உயரமான மலையாக உள்ள எவரெஸ்ட் மலையிலிருந்து 5 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் மலையேற்றம் செய்பவர்களின் விருப்பத்திற்குரிய மலையாக எவரெஸ்ட் உள்ளது. இந்த மலையின் உச்சியை தொடும் சாதனைகளை பல்வேறு தரப்பினரும் செய்து வருகின்றனர். ஆனால் இவ்வாறு செல்பவர்களால், எவரெஸ்ட் மலை மாசுபட்டு காணப்படுகிறது. இந்நிலையில் உலகளவில் பிரசித்தி பெற்ற எவரெஸ்ட்டை தூய்மை செய்யும் முயற்சியை நேபாள அரசு மேற்கொண்டுள்ளது.

கடந்த 14ம் தேதி துவங்கப்பட்ட இந்த தூய்மை பணியில் இதுவரை 5 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. இதில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் சடலங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து 45 நாட்கள் மேற்கொள்ளப்படவுள்ள இந்த தூய்மைப் பணியில் 11 டன் குப்பைகளை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

Exit mobile version