உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் வங்கதேச அணி 5 முறை உலகச் சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி,4ல் வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங், பவுலிங், பில்டிங் என அனைத்து விதத்திலும் வலுவாக உள்ளது. வங்கதேச அணி 5 போட்டிகளில் விளையாடி 2 ல் வெற்றி பெற்று பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. கடந்த போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியை துவம்சம் செய்து வெற்றி பெற்ற வங்கதேசம், ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க முழு பலத்துடன் தயாராகி வருகிறது. மஷ்ரப் மார்டோசா தலைமையில் போட்டியை எதிர்கொள்ளும் அந்த அணியின் ஆல் ரவுண்டர் சகிப் அல் ஹாசன் ஆஸ்திரேலிய அணிக்கு சவாலாக விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாட்டிங்காமில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.