கூடலூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசத்தால் 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்திருப்பதாக விசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கூடலூரில் மலையடிவாரத்தை ஒட்டிய விவசாய நிலங்களில் வாழை, தென்னை, மா, மொச்சை, உளுந்து உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள், நாயக்கர்தொழு பகுதியை சேர்ந்த பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான 6 ஏக்கர் பயிரிட்டிருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியது. இது வாடிக்கையாக உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென்று வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.