அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 12 சதவீதமாக இருந்து வந்த நிலையில், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 17 சதவீதமாக அதிகரித்துள்ளது.