மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பலத்த பாதுகாப்பு

73-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் பார்வையாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலையம் முழுவதும் தீவிர ரோந்து பணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version