மதுரை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட 23 துப்பாக்கிகள் பறிமுதல்

துபாயிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட 23 துப்பாக்கிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் இளையன்குடியை சேர்ந்த திஷாத், அஜ்மல்கான், முனிஸ் ஆகிய மூவரும் துபாயிலிருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தனர். அவர்களிடம் சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். மூன்று பேரின் உடைமைகளை சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்ததில், 23 துப்பாக்கிகளை கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் மூன்று பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version