மதுரையில் 5 நாட்கள் தேசிய ஒருமைப்பாட்டு முகாம்

இந்தியாவின் 14 மாநிலங்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளைக் கொண்ட, தேசிய ஒருமைப்பாட்டு முகாம் மதுரையில் தொடங்கியது.  

மதுரை, திருப்பரங்குன்றம் அருகே உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில், ஒரே பாரதம்… உன்னத பாரதம்… என்ற தலைப்பில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் தொடங்கியது. இதில், பீகார், கர்நாடகா, மணிப்பூர், கவுகாத்தி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள நடன கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து 5 நாட்கள், மதுரையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ள இந்த கலை நிகழ்ச்சி முகாமை, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட நமது இந்தியாவை ஒருமுகப்படுத்தும் வகையில் இந்த முகாம் நடக்கிறது என்று தெரிவித்தார்.

Exit mobile version