5 நாட்களுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு இயக்கப்பட்ட சம்ஜவுதா விரைவு ரயிலில் 12 பேர் மட்டுமே பயணம் செய்தனர்.
புல்வாமா தாக்குதல் எதிரொலியாக இந்தியா- பாகிஸ்தான் இடயேயான ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 5 நாட்களுக்கு நீடித்து வந்த பதட்டம் தணிந்த நிலையில் ரயில் சேவை தொடங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து நேற்று இரவு டெல்லியில் இருந்து சம்ஜவுதா ரயில் பாகிஸ்தானுக்கு இயக்கப்பட்டது. ரயிலில் 12 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். இதில் 10 பேர் படுக்கை வசதியுள்ள வகுப்பிலும், 2 பேர் குளிர்சாதன வகுப்பிலும் பயணம் செய்துள்ளனர். பயணம் செய்த 12 பேரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.