5.3 டன் பொருட்களுடன் ஜப்பான் நாட்டு விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்குத் தேவையான 5.3 டன் பொருட்களுடன் ஜப்பான் நாட்டு விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

ரஷ்யா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச நிலையத்தை நிறுவி ஆராய்ச்சி செய்து வருகின்றன. சுழற்சி முறையில் அங்கு வீரர்கள் தங்கி ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான பொருட்கள், விண்கலன்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், விண்வெளி வீரர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மின் கலன்கள், இதர உபகரணங்களுடன், கோனோட்டரி 8 என்ற ஆளில்லா விண்கலத்தை ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜக்சா விண்ணில் ஏவியது. தென் மேற்கே உள்ள தனேகஷிமா ஏவுதளத்தில் இருந்து H-2B ராக்கெட் மூலம், கோனோட்டரி 8 விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட 15 நிமிடங்களுக்குப் பிறகு, ராக்கெட்டில் இருந்து விண்கலம் பிரிந்தது.

Exit mobile version