திருவண்ணாமலையில், பானை மீது பத்மாசனம் செய்து சாதனை நிகழ்த்திய மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.
திருவண்ணாமலை சேர்ந்த விவேக்குமார், சந்தியா தம்பதியரின் மகளான திரிதி என்பவர் தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நீர் மேலாண்மையை பாதுகாக்க வலியுறுத்தியும், மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டியும், 3 பானைகள் மீது அமர்ந்து பத்மாசனம் செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
3 பானைகள் மீது 17 நிமிடங்கள் அமர்ந்து சாதனை நிகழ்த்திய மாணவி திரிதிக்கு பாராட்டு தெரிவித்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.