மேற்கு வங்கத்தில் இன்று 4ம் கட்டத் தேர்தல்

மேற்கு வங்கத்தில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கனவே, மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 44 தொகுதிகளில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும், வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். நான்காம் கட்ட தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் உள்பட 373 பேர் களத்தில் உள்ளனர். ஒரு கோடியே 15 லட்சம் வாக்காளர்கள், வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஐந்து மாவட்டங்களில் உள்ள 44 தொகுதிகளும் பதற்றமானவை என்பதால் 789 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version