மொஹாலியில் நடைபெற்று வரும் நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் முன்னாள் இந்திய கேப்டன் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், எதிர்பார்த்தது போல ரிஷப் பண்ட் அணியில் இடம் பிடித்தார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் சர்மா – தவான் ஜோடி இந்திய அணிக்கு அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தவான் சிறப்பாக ஆடி தனது 16 சதத்தை பூர்த்தி செய்தார்.
இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்தது. 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-2 சமன் செய்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் பீட்டர் ஹண்ட்ஸ்காம்ப் சதம் அடித்து அசத்தினார். மேலும் அந்த அணியின் அஷ்டன் டர்னர் அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற செய்தார்.