தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் புதியதாக 49 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறினார். அதன்படி, இன்று மட்டும் 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 283-லிருந்து 365 ஆக உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1372 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் இதுவரை 35 ஆயிரத்து 36 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version