தடைகள் பல தாண்டி வெற்றி சரித்திரம் படைத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’

தடைகள் பல தாண்டி வெற்றி சரித்திரம் படைத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் வெளியாகி 48 ஆண்டுகள் ஆனதை, அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

1973 ஆம் ஆண்டு மே 11ம் தேதி வெளியான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்திற்கு வரலாற்றில் பல சிறப்புகள் உண்டு.

திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டு, அஇஅதிமுக-வை துவங்கிய பின், அக்கட்சி கொடியுடன் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் வெளியானது.

எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் திருப்பத்தின் போது இந்த படம் வெளியாக இருந்ததால், திமுக அரசின் மூலம் பல தடைகளும் பிரச்னைகளும் ஏற்பட்டன.

ஆனாலும், அவையனத்தையும் தனது வெற்றிக்கான படிக்கட்டுகளாய் மாற்றிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், மிக துணிச்சலாக படத்தை வெளியிட்டு, மாபெரும் சாதனையை படைத்துக் காட்டினார்.

கோடிகளில் வசூல் செய்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம், அதுவரை தமிழ் சினிமாவில் நிகழ்த்திடாத பல சாதனைகளை தன் வசமாக்கியது.

இந்தப் படத்தை எம்.ஜி.ஆரே தயாரித்ததோடு, அவரே இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version