சென்னை வளசரவாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 48 சவரன் தங்க நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது.
சென்னை வளசரவாக்கம் ஸ்ரீலட்சுமி நகர், 5 வது தெருவை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அரக்கோணத்தில் உள்ள கோயிலுக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் இவரது வீட்டின் முன் பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதாக அக்கம், பக்கத்தில் இருப்பவர்கள் பத்மநாபனுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டை சோதனை செய்தனர். அப்போது பீரோவில் இருந்த 48 பவுன் நகைகள், பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது