தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு! மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரங்கள்

தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6 ஆயிரத்து 95பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 48 பேருக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 21 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர். புதிதாக பாதிக்கப்பட்ட 48 பேரில் 42 பேர் டெல்லியில் நடைபெற்ற தனியார் மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ள நிலையில், மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரங்களை பார்க்கலாம். சென்னையில் அதிகபட்சமாக 156 பேருக்கும், கோவையில் 60 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. திண்டுக்கலில் 46 பேருக்கும், திருநெல்வேலியில் 40 பேருக்கும், ஈரோட்டில் 32 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சியில் கொரேனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. நாமக்கலில் 33 பேருக்கும்,  ராணிப்பேட்டையில் 27 பேருக்கும், செங்கல்பட்டு மற்றும் மதுரையில் தலா 24 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கரூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. தேனியில் ஒரே நாளில் 16 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. தூத்துக்குடியில் 17 பேருக்கும், விழுப்புரத்தில் 20 பேருக்கும், திருப்பூரில் 22 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடலூர், சேலம், திருவள்ளூரில் தலா 13 பேருக்கும், திருவாரூரில் 12 பேருக்கும், விருதுநகரில் 11 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version